Monday, May 23, 2011

தென்காசியில் மேம்பால பணி | Tenkasi News | Tenkasi Membala Panigal

தென்காசியில் மேம்பால பணி நடைபெறுவதையடுத்து அரசு பொது நூலக கட்டடம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்காசி ரயில்வே பீடர் ரோட்டில் வ.உ.சி. அரசு பொது நூலகம் இயங்கி வந்தது. 

தற்போது தென்காசியில் மேம்பால பணி  நடைபெற்று வருவதால் பாலத்தின் இருபுறமும் சாலைகள் போடுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் இடிக்கும் பணி கடந்த 3 நாட்களுக்கு முன் துவங்கியது.

இதில் அரசு கட்டடங்கள் பெரும்பாலும் இடிக்கப்பட்டுவிட்டது. தென்காசியில் மேம்பால பணி, பாலம் அமைய இருக்கும் இடத்தில் உள்ள நூலக கட்டடம் இடிக்கும் பணியினாலும், வேறு இடத்திற்கு நூலகம் மாற்றுவதினாலும் ஒரிரு தினங்களாக இயங்காமல் இருந்த நூலகம் தற்போது மட்டப்பா தெரு ஐசிஐசிஐ பாங்க் அருகேயுள்ள வாடகை கட்டடத்தில் இன்று (22ம் தேதி) மாலை 3 மணி முதல் இயங்குகிறது என நூலகர் ராமசாமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment