கடையநல்லூரில் அமைந்துள்ள மிகவும் பழையான கடைகாலீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள், பொதுமக்கள் முடிவு செய்தனர். இதன்படி 5 நிலை கொண்ட 76 அடி உயரம் உள்ள ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் ராஜகோபுர கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் ஜூன் 19ம் தேதி ராஜகோபுர கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன.
கோயில் முழுவதும் சுவாமி, அம்பாள் விமானங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு வுருகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், திருப்பணி குழுவினர், கடையநல்லூர் அனைத்து பொதுமக்கள், பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment